எரிபொருள் நிலையத்தில் அதிகரிக்கும் வன்முறை செயல்கள்
எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை வௌ்ளவாய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் இந்த சம்பவம் நேற்றிரவு(05) நடைபெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து கற்கள் மற்றும் போத்தல்களினால் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது

குறித்த தாக்குதலின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 பேரும் 18-45 வயதுக்கு இடைப்பட்ட நபர்கள் எனவும் தாக்குதலில் ஈடுப்பட்ட 20 நபர்களுடைய மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நடவடிக்கை

சந்தேக நபர்களுடன் மோட்டார் சைக்கிள்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri