சீனப் பொருட்களுக்கான வரி தொடர்பில் அமெரிக்கா முக்கிய நடவடிக்கை
சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 125 சதவீத வரிகளில் இருந்து பல பொருட்களை நீக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், கணினிகள், கணினி உதிரி பாகங்கள் மற்றும் சேமிப்பு சாதனங்கள்(memory devices) உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது.
இந்தப் பொருட்களில் பல சீனாவில் தயாரிக்கப்படுவதாலும், இந்தப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதன் காரணத்தாலும், வரிகளை நீக்கியதாக ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
ஐபோன்கள்
ட்ரம்ப் நிர்வாகம் விதித்த புதிய வரிகள் அமெரிக்காவில் ஐபோன்கள் மற்றும் பிற மின்னணு பொருட்களின் விலையை மூன்று மடங்காக உயர்த்தக்கூடும் என கூறப்பட்டது.
இதன் காரணமாக ட்ரம்ப் நிர்வாகம் கட்டணங்களை நீக்க நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
