உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு கோட்டாபய நிதியுதவி! வெளியாகிய குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாவது ஆண்டு நிறைவை இலங்கை நினைவுகூரத் தயாராகி வருகிறது.
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்ட உயிர்கள், காவு கொள்ளப்பட்டமைக்கு, இஸ்லாமிய தீவிரவாதக் குழு மீது உடனடியாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும், உளவுத்துறை கசிவுகள், தகவல் தெரிவிப்பவர்களின் சாட்சியங்கள் மற்றும் சூழ்நிலை நிதி தடயங்கள் ஆகியவற்றின் புதிய அலை, இந்தத் தாக்குதல் மிகவும் தீவிரமாக திட்டமிடப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
இலங்கை அரசு
ஒருவேளை இலங்கை அரசிற்குள் இருக்கும் சக்திவாய்ந்த கூறுகளால் இது திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் இருப்பதாக கொழும்பின் ஆங்கில இணையச்செய்தி ஒன்று கூறுகிறது.
அதேநேரம் 2019 நவம்பரில் ஜனாதிபதியாக வருவதற்காக, கோட்டாபய ராஜபக்ச, தமது நெருங்கிய கூட்டாளி மூலம் தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதியளித்திருக்கலாம் என்ற மிகவும் வெடிக்கும் கூற்றும் வெளியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்களுக்கு கசிந்த ஒரு உளவுத்துறை அறிக்கையாக இது கருதப்படுகிறது இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்று குற்றவியல் விசாரணைக்கு உட்படவேண்டிய நிலை ஏற்படும் என்றும் இணையச் செய்தி குறிப்பிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் பெருந்தோட்டத்துறையின் ஒரு முக்கிய நபரே நிதியுதவிக்கான வழியாக செயற்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஒரு சொகுசு விருந்தகத்தின், இயக்குநராகவும் பணியாற்றிய இந்த தொழிலதிபர், சீனி இறக்குமதி ஊழலில் இருந்து பயனடைந்ததாகக் கூறப்படுகிறது.
அவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு 65 மில்லியனுக்கும் அதிகமாக வழங்கியதாகக் கூறப்படுவதாக ஆங்கில இணையம் தெரிவிக்கிறது.
இந்த நிதி, வெடிபொருட்களை வாங்குவதற்கும்,குற்றவாளிகளின் பயணம் மற்றும் தங்குமிடங்களுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டில் தஞ்சம் கோரிய இரண்டு நடுத்தர தர புலனாய்வு அதிகாரிகள் உட்பட பலர், கோட்டாபய ராஜபக்சவுக்கு விசுவாசமான இலங்கையின் இராணுவ புலனாய்வின் ஒரு இரகசியப் பிரிவு, தாக்குதல் நடத்தியவர்களுக்கு முலோபாய ஆதரவை வழங்கியதாகக் கூறுகின்றனர்.
சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது நண்பர்களை, கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்புக்கு அடையாளம் காணப்படாத அரசாங்க வாகனங்களில் அழைத்துச் செல்வது, பாதுகாப்பான இடங்களில் தற்காலிக தங்குமிடம் வழங்குவது; தாக்குதல் நடத்தியவர்கள் கண்டறிவதைத் தவிர்க்க தகவல் தொடர்பு உபகரணங்களை வழங்குவது போன்ற உதவிகளையே, இராணுவ இரகசியப்பிரிவு தாக்குதல்தாரிகளுக்கு வழங்கியதாக ஆங்கில இணையம் குறிப்பிட்டுள்ளது.

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
