நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வீதி விபத்துக்கள்: ஒருவயது குழந்தை உட்பட 5 பேர் பலி!
சமீபத்திய நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த பல வாகன விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் ஒரு வயது மற்றும் 7 மாத குழந்தையும் அடங்குவதாகவும் கூறப்படுகிறது.
மஹவ பொலிஸ் பிரிவின் அனுராதபுரம் - பதேனியா வீதியில் உள்ள கெட்டபஹுவ பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில், வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான், வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
01 வயது 07 மாத குழந்தை
விபத்தில் உயிரிழந்தவர்கள் வெலிவேரிய, கொச்சிவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் மற்றும் 53 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ருக்மல்கந்துர பகுதியில், வீட்டின் முன் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தை ஆயத்தப்படுத்தி பின்னோக்கிச் செலுத்தப்பட்ட போது , வீட்டில் இருந்த குழந்தை இடது பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை, 01 வயது 07 மாதங்கள் வயதுடையது எனவும், விபத்தை ஏற்படுத்திய இறந்த குழந்தையின் 39 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மனம்பிட்டி பொலிஸ் பிரிவின் திம்புலாகல மஹவுல்பத - வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி, வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சிலாவத்துறை பகுதி
விபத்தில் படுகாயமடைந்த பெண் மனம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர் மனம்பிட்டிய மஹௌல்பதவின் வசிக்கும் 81 வயது பெண் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிலாவத்துறை - முள்ளிகுளம் - புத்தளம் பிரதான வீதிக்கும் இடையே பாதையை கடக்கச் சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி சிலாவத்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியதாலைக்கு மாற்றப்பட்ட பின்னரி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - கண்டி பிரதான வீதி
இந்நிலையில், இன்று திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியின் அக்போபுர பகுதியில் பேருந்து ஒன்று கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளான பின்னர் எதிரே வந்த கனரக வாகனத்துடனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மாவனெல்லையில் இருந்து யாத்ரீகரகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தானது, கெப் வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, வண்டியின் ஒரு பக்கத்தில் மோதி, முன்னால் வந்த கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரால் காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நேரத்தில் இறந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பேருந்தின் பாதுகாப்பற்ற ஓட்டுதலே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
