இந்திய அணிக்கு வழங்கப்பட்ட 125 கோடி ரூபாய்
உலக கிண்ண போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்ட நிலையில், அதில் தனித்தானியாக யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, விராட் கோலி, ரோஹித் சர்மாவை உள்ளிட்டோரைக் கொண்ட 15 பேர் அணிக்கும் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டிற்கும் தலா 5 கோடி ரூபாய்கள் வழங்கப்படவுள்ளது.
உதிரி ஆட்டக்காரர்கள்
துடுப்பாட்டப் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், களத்தடுப்பு பயிற்சியாளர் திலீப் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு 2.50 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அஜித் அகர்கர் உட்பட தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
உதவி பணியாளர்களான 3 உடற்பயிற்சி உதவியாளர்கள் உட்பட்ட 8 பேருக்கு தலா 2 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அதேபோன்று உதிரி ஆட்டக்காரர்களான ரின்கு சிங், சுப்மன் கில், ஆகேஸ் கான், கலீல் அகமது ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்து பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை தொடங்கிய ஜீ தமிழ்.. அர்ச்சனா தொகுப்பாளினி, நடுவர்கள் யார் யார்? Cineulagam
