லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 121 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
லிந்துலை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த மூன்று தினங்களுக்குள் 121கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என லிந்துலை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 225 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளிலேயே 121 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், டயகம போப்பத்தலாவ, ஹோல்புறூக், மெராயா, இராணிவத்தை உள்ளிட்ட பிரதேசங்களிலேயே தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam