அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு - ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
இந்த ஆண்டு இறுதிக்குள் அரச சேவைக்கு 120,000 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (20) நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு
பல ஆண்டுகளாக அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் பொலிஸ் துறைக்கு 10,000 பேரும், ஆசிரியர் சேவைக்கு 23,000 பேர் உட்பட 120,000 பேர் அரச சேவைக்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறோம். பல ஆண்டுகளாக நாங்கள் அரச பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யவில்லை.
நாங்கள் நினைத்தபடி ஆட்சேர்ப்பு செய்யவில்லை. நாங்கள் அந்த இடங்களை நிரப்பவில்லை. பிரதமர் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளோம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எத்தனை பேர் தேவை? அது தேவையா? அவர்களிடம் வேலை இருக்கிறதா? என்பதினை ஆராய குழுவை நியமித்துள்யோம்.
இந்த ஆண்டு அரச பணிக்கு 1,21,000 புதியவர்களை நாங்கள் நியமிப்போம். பொலிஸ் துறைக்கு 10,000 பேரையும், ஆசிரியர்களுக்கு 23,000 பேரையும் நியமிப்போம். கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு இளைஞனுக்கு வேலை கிடைக்கும். அவை ஒரு பொருளாதார ஊக்கமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வங்காள விரிகுடாவில் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் தாழமுக்கம்! வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்