கொழும்பில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது
கொழும்பின் கெஸ்பேவ - ஜாலியகொட மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் வித்தையில் ஈடுபட்ட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 18 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. எனினும் ஆறு இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகள்
குறித்த பகுதியில் அதிகளவான முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தி அயலவர்களுக்கு இடையூறாக சாகசங்களை நிகழ்த்துவதாக பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே, பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
இந்தநிலையில் டிக்டொக் சவால்களுக்காக பைக் ஸ்டண்ட் (வித்தை) செய்த இந்த இளைஞர்களைக் கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.
இந்த வித்தைகளுக்காக 100,000 ரூபாய் பந்தயம் கட்டப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
