திடீரென வீதியில் மயங்கி விழுந்து பாடசாலை மாணவன் மரணம்
புலத்சிங்கள- கோபவக, கோவின்ன பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று (09) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹொரண வித்யாரத்ன வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பிரபுத்த பிரபாஸ்வர என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு சுமார் 01 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டும்.
மாணவனின் தந்தை வீட்டில் இல்லாததால், பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்ற மாணவன், சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து சென்றபோது வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், மாணவன் உடனடியாக ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri