இரண்டு குடும்பங்களை கொலை செய்ய திட்டமிட்ட 12 வயது சிறுமி-உலக செய்திகள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 2 குடும்பத்தை மொத்தமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல திட்டமிட்ட சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தின் வெதர்போர்ட் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருந்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 12 வயது சிறுமி ஒருவரை மீட்டுள்ளனர்.
இதன்போது அவரிடம் கைத்துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறிப்பிட்ட குடியிருப்புக்குள் சென்று சோதனையிட்டதில், அந்த சிறுமியின் 38 வயது தந்தையும் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் குற்றுயிராக காணப்பட்டுள்ளார். இருவரையும் உடனடியாக உலங்குவானூர்தியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது அந்த சிறுமியும் அவரது ஒரு தோழியும் இணைந்து அவர்களது குடும்பங்களைக் கொல்ல திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்று அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
பல வாரங்களாக இருவரும் இதற்கு திட்டமிட்டு வந்ததாகவும், தமது குடும்பத்தை கொன்றுவிட்டு, இங்கிருந்து இரண்டாவது சிறுமியின் குடியிருப்புக்கு செல்வதே திட்டம் எனவும் தெரியவந்துள்ளது.