பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்! பொலிஸார் விசாரணை
பிரித்தானியாவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் வின்ஸ்ஃபோர்ட் நகரில் உள்ள வார்ட்டன் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
12 வயதான லோகன் கார்ட்டர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் பலத்த காயங்களுடன் மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் விளையாட்டு உபகரணங்களில் இருந்து தவறி விழுந்து இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுவனின் உயிரிழப்பு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 16 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
