ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகைக்குள் போடப்பட்ட திட்டம்! 12 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
இது இவ்வாறிக்க இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத போராட்டமொன்றாக மாறியிருந்த கோட்டா கோ கம போராட்டத்தின் போது களத்திற்கு ராஜபக்ச ஆதரவாளர்கள் வருகை தந்து தாக்குதல் மேற்கொண்டு அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தார்கள்.
இதற்கு முன்னதாக அலரிமாளிக்கைக்குள் ஒரு கூட்டம் இடம்பெற்றுள்ளது.அதனை தொடர்ந்தே ராஜபக்ச ஆதரவாளர்கள் இவ்வாறு செயற்பட தொடங்கியுள்ளார்கள்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவும் இந்த கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார், இது தொடர்பான ஆதாரங்கள் உள்ளன.
அதனைதொடர்ந்தே இவரும் ராஜபக்ச ஆதரவாளர் என்று கூறி மக்கள் அவரை துரத்தி சென்று அதன் பின்னர் துப்பாக்கி சூடு இடம்பெற்று மக்களால் கொல்லப்பட்டார்.
அதற்கான தீர்ப்பு தற்பொது வழங்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கான காரணம் என்ன,? ஆர்ப்பாட்டத்தில் மக்களை தாக்கிய ராஜபக்ச ஆதரவாளர்கள் தற்போதும் வெளியில் சுற்றி திரிகின்றார்கள்.
தேர்தலில் களமிறங்கிளால் தோற்றுவிடுவோம் என்று தேசிய பட்டியலில் வந்த நாமல் ராஜபக்ச தற்போது வீரவசனம் பேசுகின்றார்.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் News Insight நிகழ்ச்சி...