12 இந்தியர்களின் உயிரை பறித்த ரஷ்ய - உக்ரைன் களமுனை
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் போரில் களமிறங்கிய 126 இந்தியர்களில் தற்போது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
96 பேர் மட்டுமின்றி, மேலும் 16 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரகம் உறுதி செய்துள்ளது.
ரஷ்யாவில் சிக்கி போரில் ஈடுபட்டுள்ள அனைத்து இந்தியர்களையும் விடுவித்து திருப்பி அனுப்புவதற்காக ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
126 இந்தியர்கள்
வெளியான தரவுகளின் அடிப்படையில் 126 பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து போரிட்டு வந்ததாகவும், அதில் தற்போது வரையில் 96 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாயமானவர்கள் பட்டியலில் மேலும், 18 இந்தியர்கள் இன்னும் போரில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த 18 பேரில் 16 இந்தியர்கள் நிலை தொடர்பில் தகவல் இல்லை என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரஷ்யா தரப்பில் இந்த 16 பேர் மாயமானவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
மேலும், வெளியான தகவலின் அடிப்படையில், வேலைவாய்ப்பு என போலியான விளம்பரங்களால் ஈர்க்கபப்ட்டு ரஷ்யாவுக்கு சென்றவர்களை இராணுவத்தில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
