இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோத நுழைந்த 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
யாழ். காரைநகரை அண்டியc அத்துமீறி நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(11.04.2026) இரவு விசேட ரோந்து நடவடிக்கையின் போதே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்கப் புறப்பட்ட மேற்படி கடற்றொழிலாளர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
12 கடற்றொழிலாளர்கள் கைது
இதன்போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், 1856 இலக்கமுடைய இந்திய இழுவைப்படகுடன் 12 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் இன்று(12) காலை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்படி கடற்றொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்த பின்னர், அவர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வடக்குக் கடலில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடற்படையினர் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri