கம்பஹா மாவட்டத்தில் 12 மணி நேர நீர் வெட்டு
சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதால் 12 மணி நேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
குறித்த நீர் விநியோக தடையானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.11.2023) மு.ப. 8:30 முதல் பி.ப. 8:30 வரையில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய Al-Shifa வைத்தியசாலையும் அங்கு இருப்பதாகக் கூறப்படுகின்ற ஹமாசின் நிலக்கீழ் தளங்களும் (Video)
நீர் தடை அமுலாகும் பகுதிகள்
பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படுமென கூறப்படுகிறது.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
