கால்நடைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வந்த இருவர் கைது
மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்தி வந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் நேற்று (16.11.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேய்ச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கால்நடைகளை கொன்றுவந்துள்ளதுடன் கால்நடைகளின் வாயை குறிவைத்து பன்றிவெடிகளை வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துவந்துள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேச்சல்தரை பகுதியில் துப்பாகியுடன் உலாவித்திரிந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவரை பொலிஸார் மடக்கிபிடித்து கைது செய்தனர்
மேலும் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்

லண்டனில் பிரபலமான உணவகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட நாய் இறைச்சி: அதிகாரிகள் நடவடிக்கை News Lankasri

பிரித்தானியாவின் பரபரப்பான விமான நிலையத்தில் விமானங்கள் திடீர் நிறுத்தம்: நடந்தது என்ன? News Lankasri
