இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்! நாசா விடுத்துள்ள எச்சரிக்கை
இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
இதன் காரணமாக பருவநிலை மாற்றத்தால் இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது.
உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகின்ற நிலையில், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
அதில், 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா நாசா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ள 12 நகரங்கள் பின்வருமாறு,
- குஜராத் மாநிலத்தில் கண்ட்லா 1.87 அடி
- ஒக்ஹா 1.96 அடி
- பவுநகர் 2.70 அடி
- மகாராஷ்டிராவின் மும்பை 1.90 அடி
- கோவாவின் மோர்முகாவ் 2.06 அடி
- கர்நாடகாவின் மங்களூர் 1.87 அடி
- கேரளாவின் கொச்சி 2.32 அடி
- ஒடிசாவின் பரதீப் 1.93 அடி
- கொல்கத்தாவின் கிதிர்பூர் 0.49 அடி
- ஆந்திராவின் விசாகப்பட்டினம் 1.77 அடி
- தமிழகத்தின் சென்னை 1.87 அடி
- தூத்துக்குடி 1.9 அடி
தற்போதைய கால நிலையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர் மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam