முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு
மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 11 ஆவது முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாடு நேற்று(21)புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது,கடந்த முறை நடைபெற்ற மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் முதலில் கலந்துரையாடப்பட்டன.
கலந்துரையாடல்
விசேடமாக அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் சமூக நலத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்து பிரதேச செயலகங்களின் நிர்வாக , நிதி, திட்டமிடல் செயற்பாடுகள், முன்னேற்றங்கள், குறைபாடுகள், சமூக நலச்சேவை செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், இந்த வருடத்தில் செயற்படுத்த வேண்டிய திட்டங்கள், 2025 வரவு செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு, அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பிரச்சினைகள்
குறிப்பாக முதலாவது சுற்று பிரதேச செயலாளர் மாநாட்டில் பிரதேச செயலக, மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த முறை புதுக்குடியிருப்பு பிரதேச சமூக மட்ட அமைப்புக்களின் (Community-Based Organizations (CBOs)) பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் அமைப்புக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது சிறப்பம்சமாகும்.









51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri