வீதி விபத்துகளில் பறிபோகும் சிறுவர்களின் உயிர்! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் வீதி விபத்துக்களினால் 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வீதி விபத்துக்களை தடுப்பதற்கான நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.
''பாதுகாப்பான சாலைகள்-பாதுகாப்பான குழந்தைகள்" என்ற சர்வதேச சாலை பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார இழப்புக்கள் ஏற்படும்
மேலும் கூறுகையில்,நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பணியாளர்களை உருவாக்கும் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் இந்த விபத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழக்கின்றனர், மேலும் இது தொடர்பான போக்கு அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், எதிர்காலத்தில் வீதி விபத்துக்களால், உயிரிழப்புகள் மற்றும் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும், இதனால் நாட்டிற்கு கணிசமான பொருளாதார இழப்புக்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri