வவுனியாவில் கடும் மழை மற்றும் புயல் காரணமாக உடைந்த 114 குளங்கள்..
வவுனியாவில் பெய்து வந்த கடும் மழை மற்றும் புயல் காரணமாக 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் புயலின் தாக்கத்தின் காரணமாக தாழ்நில பிரதேசங்களில் நீர்வரத்து அதிகரித்து குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக உயர்வடைந்துள்ளது.
இராணுவத்தினரின் உதவி
இதனால் பல குளங்கள் வான் பாய்ந்ததுடன் 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளது.

இதன் காரணமாக மக்களுடைய குடிமனைகளுக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் குளத்து வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் பல்வேறு பாதிப்புகளையும் சந்தித்திருக்கின்றனர்.
இவ்வாறு உடைப்பெடுத்த 114 குளங்களில் 33 குளங்களை ராணுவத்தினரின் உதவியுடன் அதன் அணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய குளங்களையும் அதனைத் தொடர்ந்து கட்டுமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



