மட்டக்களப்பு மாவட்டத்தில் 114 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 114 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்துள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோறும் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைப் பிரதேச ரீதியாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும் , ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும், செங்கலடி
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய
அதிகாரி பிரிவில் 06 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16
பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும், கிரான் சுகாதார
வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி
பிரிவில் 03 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேருமாக
மொத்தம் 114 பேருமாக கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.