சிவப்பு பிடியாணையில் சிக்கிய 112 குற்றவாளிகள்! அதிரடியாக முடக்கப்படவுள்ள மில்லியன் கணக்கான சொத்துக்கள்
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு கடுமையான நடைமுறை
இதற்கமைய, குற்றவாளிகளை 2027 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு அழைத்து வர முடியும் என்றும், அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் போதைப்பொருள் கடத்தல் மூலமே சட்டவிரோதமாக பணம் சம்பாதித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
சட்டவிரோதப் பணத்தில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் பொலிஸின் இரண்டு விசேட பிரிவுகள் ஊடாக 24 மணி நேரமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பொறுப்பேற்க திட்டமிட்டுள்ள சொத்துக்கள்
2024 ஆம் ஆண்டு: 1,490 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்
2025 ஆம் ஆண்டு: 1,549 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்
2026 ஆம் ஆண்டு (நேற்றைய தினம் வரை): 1,656 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்
இந்த சொத்துக்களில் தங்க ஆபரணங்கள், காணிகள், வாகனங்கள் மற்றும் ரொக்கப் பணம் என்பன அடங்குகின்றன.
போதைப்பொருள் சோதனைகளும் கைதுகளும்
2026 ஆம் ஆண்டில் ஹெரோயின் - 4,483 கிலோ (மதிப்பு 107.942 பில்லியன் ரூபாய்) ஐஸ் போதைப்பொருள் - 7,129 கிலோ (மதிப்பு 121.64 பில்லியன் ரூபாய்), கஞ்சா - 33,277 கிலோ (மதிப்பு 5.293 பில்லியன் ரூபாய்), கொக்கைன் - 333 கிலோ (மதிப்பு 14.306 பில்லியன் ரூபாய்)
தற்போது ஐஸ், ஹெரோயின் மற்றும் கொக்கைன் ஆகிய போதைப்பொருட்களை 5 கிராமுக்கு மேல் வைத்திருப்பின் மேல் நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் வூட்லர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 5,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களில் 450 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ராஜபக்சக்களுக்கு நெருக்கமான நபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்