யாழில் 11 வயது மகனை தேடிச் சென்ற தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் - கொட்டடியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(22.09.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
11 வயதான சிறுவன் நாவல் மரக்கிளையில் குளுக்கோஸ் வயரினால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இதனையடுத்து, சிறுவனை உடனடியாக மீட்ட அவரது தாயார், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும், அதற்குள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவனின் மரணம் தற்கொலை என பிரேத பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் பதிவாகியுள்ள மிகக் குறைந்த வயதுடைய தற்கொலை சம்பவமாக இது பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மிகக் குறைந்த வயதுடைய தற்கொலை சம்பவம் 13 வயது சிறுவன் தொடர்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.