ஒரே நாளில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஒரே நாளில் குறித்த குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை நேற்று (08.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் குழுக்களோடு தொடர்புகளைப் பேணினர் என்று கூறப்படும் மேலும் 16 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள்
இதன்படி கைது செய்யப்பட்டுள்ள 11 பேரில் மேல் மாகாணத்தின் (Western Province) தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முல்லேரியா, மல்வானை ,கடுவலை மற்றும் உடுகம்பொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 57, 39, 25, 23 மற்றும் 35 வயதுடைய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை (Mattara) பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கொழும்பு (Colombo) பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு 10, கொழும்பு 14, கொழும்பு 13 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 44, 21, 30, 20 மற்றும் 33 வயதுடைய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்
இதுவரையில் பாதாள உலகக் குற்றக் குழுக்களைச் சேர்ந்த 913 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan