பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைக்கு வைத்தியசாலையில் காதுக்குத்து நிகழ்வு! நெகிழ்ச்சி சம்பவம்
பெற்றோர்களால் கைவிடப்பட்ட, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு வைத்தியசாலை ஊழியர்கள் காதுக்குத்து நிகழ்வு நடத்தியுள்ளமை காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்து 06 நாட்களில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தையொன்று திருகோணமலை சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டுவந்த நிலையில், அக்குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த குழந்தை,கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் அங்குள்ள வைத்தியசாலை ஊழியர்களினால் அக்குழந்தைக்கு காதுக்குத்து நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
கந்தளாய் கோவிட் வைத்தியசாலை ஏழாம் வாட்டுக்கு பொறுப்பான தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு காது குத்தும் விழாவை மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளமை காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
