யாழ். போதனா வைத்தியசாலையில் 11 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் 11 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
யாழ். காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
குழந்தைக்கு நேற்று அதிகாலை ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பெற்றோரால் காரைநகர் வலந்தலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி
நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 22 மணி நேரம் முன்

மெஸ்சி, எம்பாப்பேவை மீறி கடைசி நொடிகளில் கோல் அடித்த வீரர்! வெற்றியை இழந்ததால் அதிர்ச்சியில் உறைந்த PSG News Lankasri

3 வார முடிவில் விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு செய்த தமிழக வசூல்- முதலில் இருப்பது யார்? Cineulagam

நயன்தாரா கேட்டும் முடியாது என்று கூறிய லைக்கா நிறுவனம்.. திடீரென குழப்பத்தை உண்டாக்கிய விக்கி Cineulagam
