நிலுவையில் உள்ள 11 இலட்சம் வழக்குகள்
இலங்கையில் சுமார் பதினொரு லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் இலங்கையில் மொத்தமாக 1122113 லட்சம் வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாது நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பல ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதிமன்றத் துறை எதிர்நோக்கும் பாரி சவாலாக கருதப்படுகின்றது.
நீதிபதிகள் பற்றாக்குறை
நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அதிகளவு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள போதியளவு நீதிபதிகள் இல்லாமையினால் இவ்வாறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2015ம் ஆண்டில் சுமார் ஏழு லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் கடந்த 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 11 லட்சமாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டில் ஒரு மில்லியன் மக்களுக்கு 19 நீதிபதிகள் என்ற அடிப்படையில் நீதிமன்றங்கள் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
