அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படை நேற்று(02.01.2026) குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கை கடற்படை, படகுடன் 11 கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளது.

இதன்போது, கைப்பற்றப்பட்ட IND/PY/PK/MM/979 எனும் தொடரிலக்கத்தை கொண்ட படகையும், கடற்றொழிலாளர்களையும் கடற்படை விசாரணைகளின் பின்னர், நீரியல்வள துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
கடற்றொழிலாளர் மீது இலங்கை நீர்பரப்பு எல்லைக்குள் அடங்கிய யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் தலைமையதிபதியால் வழங்கப்படும் வெளிநாட்டு கடற்றொழில் வள்ளம் தொடர்பிலான அனுமதிப்பத்திரம் இல்லாது கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமை, அனுமதி பத்திரம் இன்றி இலங்கை நீர்பரப்பு எல்லைக்குள் நுழைந்து கடற்றொழில் உபகரணங்களை (வலை) படகு நிற்கின்ற வரைக்கும் தொடக்கறுத்து வைக்காமை, நெடுந்தீவு கடற்பரப்புக்குள் இழுவை மடி வலைகளை பயன்படுத்தி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து, நீரியல் வளத்துரையினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய நிலவரப்படி, தமிழகத்தைச சேர்ந்த 62 கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய தினத்துடன் பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 253 கடற்றொழில் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதுடன், இதுவரையான காலப்பகுதியில் 44 படகுடன் 355 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி... ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ Cineulagam