உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் ஏற்பாட்டில் 10ஆவது உலகக் கிண்ணப் போட்டி
பிரான்ஸ் நாட்டின் Argentan நகரின் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பூப்பந்தாட்ட போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இப்போட்டிகள் இந்த மாதம் 19, 20 ஆம் திகதிகளில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
ஆரம்ப நிகழ்வாக அமைதி வணக்கம், செலுத்தப்பட்டு அகளங்கனினால் தமிழ்த்தாய் வாழ்த்து, பிரான்ஸ் தேசிய கீதம் மங்களவிளக்கேற்றல் என சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரதம விருந்தினர்
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் Argentan நகர மேயர் திரு FREDERIC LÉVEILLÉனும், துணை மேயர் YANNICK JOUADEடும் கலந்துக்கொண்டிருந்தனர்.
தொடர்ச்சியாக உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் தலைவர் ஜெகதரன் கதிர்வேலனும், அதன் ஸ்தாபகர் கந்தையா சிங்கமும் உரையாற்றி இருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் பிரதம நடுவர் Roman Pechous போட்டி நிபந்தனைகளை அறிவித்த பின்னர் போட்டி ஆரம்பமானது.
போட்டிகள் 3 வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்றுள்ளது.
276ற்க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்
இந்த போட்டிகளுக்கு வழமை போன்று இந்தியா, மலேசியா, அமெரிக்கா, கனடா, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ், அயர்லாந்து, நோர்வே, ஜப்பான், சுவீடன், பெல்ஜியம், பின்லாந்து, பிரித்தானியா நாடுகளில் பரந்து வாழும் எமது வீரர்கள் வருகை தந்து கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
16 நாடுகளில் இருந்து 276ற்க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 27 பிரிவுகளில் ஆண் பெண்கள் என இரு பாலாரும் கலந்து கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அத்துடன் தேசிய, சர்வதேச தர பட்டியல் வீர வீராங்கனைகள் அதிகம் கலந்துக்கொண்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழர் அல்லாதார் கலந்து கொள்வதற்காக சர்வதேச போட்டி ஒன்றையும் ஒழுங்கமைத்த நிலையில், அதில் சகோதர இன சிங்களப் போட்டியாளர் ஒருவரும் கலந்துக்கொண்டிருந்ததாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
