10ஆவது காயத் தடுப்பு தேசிய வாரம் ஆரம்பம்
10ஆவது தேசிய காயத் தடுப்பு வாரம்(10th National Injury Prevention Week) நேற்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.
மருத்துவ கவனிப்பு
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
ஒவ்வொரு ஆண்டும் ஏழு இலங்கையர்களில் ஒருவர் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் கடுமையான விபத்தை எதிர்கொள்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவசரநிலைகளில், சுமார் 7,500 முதல் 8,000 பேர் வரை மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்னரே இறக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான சவால்
விபத்துக்குள்ளாவோரில் பெரும்பாலோர் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களாவர் இது தேசிய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனுக்கு கடுமையான சவாலாக அமைகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் காயம் தடுப்பு வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் கவனம் செலுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 2025 ஜூலை 7 - சாலை விபத்து தடுப்பு ஜூலை 8 - பணியிட பாதுகாப்பு ஜூலை 9 - வீட்டு மற்றும் முதியோர் விபத்து தடுப்பு ஜூலை 10 - நீரில் மூழ்குவதைத் தடுப்பது ஜூலை 11 – பாடசாலை மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு என்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
