யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு! 134 பேருக்கு சிகிச்சை
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இதற்கமைய, யாழ்.போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்லும் இந்த போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
