யாழில் ஒரே நேரத்தில் 108 ஜோடிகளுக்கு திருமணம்..!
அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வ சந்நிதியில் வறுமையில் உள்ள திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிங்கப்பூர் தம்பதியொருவர் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
108 ஜோடிகளுக்கு திருமணம்
யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ள 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் நேற்றைய தினம் தெரிவித்தார்.
சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருமணம் இடம்பெறவுள்ள 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
