107 வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு
ஜனாதிபதி செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட 107 வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும், அரசியலமைப்பு சரத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட ஊழியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி இல்லாத காரணத்தினாலேயே, அந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சிக்காக அல்ல
எனவே அது கண்காட்சிக்காக அல்ல என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பாதுகாப்புடன் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக அத்தியாவசிய சேவைகளுக்கு வாகனங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri