ஜெர்மனியில் பெருந்தொகை யூரோக்களுக்கு விற்கப்பட்ட மாம்பழம்
தமிழர்களின் அங்காடிகளில் மாம்பழங்கள் பல விலைகளில் விற்பனைக்கு இருந்தாலும், ஜெர்மனிய(Germany) ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத்திருவிழாவின் முடிவில், ஏலத்தில் விடப்பட்ட மாம்பழமொன்று 1050 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது.
இதேபோன்று சமீபத்தில் வவுனியாவில் உள்ள உக்குலாங்குளம் பிள்ளையார் கோவிலில் ஏலத்தில் மாம்பழமொன்று 162,000 ரூபாய்க்கு (500 யூரோ) விற்பனையாகியது.
தொடக்க விலை
அதேவேளை இதே பகுதியிலுள்ள மற்றொரு கோவிலில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் ஒரு மாம்பழம் 95,000 ரூபாய் (300 யூரோ) விலைக்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் ஜெர்மனி, கும்மெர்ஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சிகுமாரன் கோவிலில் நடந்த ஏலத்தில் தொடக்க விலை 25 யூரோவாக இருந்தது, இறுதியில் மாம்பழம் 1050 யூரோ விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முழு வருமானமும் கோவிலின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் மற்றும் சமூக நற்பணிகளுக்கும் நிதி திரட்டும் முகமாக இவ்வகையான ஏலங்கள் இலங்கையின் வட மாகாணத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

இப்படியான ஏலங்களுக்கு கிராமவாசிகளும், புலம்பெயர் மக்களும் பெரும் அளவில் தொடர்ச்சியாக பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri