அரசாங்கத்தின் ஒரு நாள் கடன் தொகை குறித்து வெளியான தகவல்
அரசாங்கம் நாள் ஒன்றுக்கு 1050 கோடி ரூபா கடனை பெற்றுக் கொள்ள நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இவ்வாறு நாளாந்தம் 1050 கோடி ரூபா கடனாளியாகின்றது என பேராதனை பல்கலைக்கழக பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் கற்கை பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நாள் ஒன்றுக்கான வருமானம் 653 கோடி ரூபா என்பதுடன் அரசாங்கத்தின் நாளொன்றுக்கான மொத்த செலவு 1705 கோடி ரூபா என குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம்
வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் அடுத்த ஆண்டில் அரசாங்கத்தின் நாளாந்த வருமானம் 950 கோடி ரூபா எனவும் மொத்த செலவு 2160 கோடி ரூபா எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வரி அதிகரிப்பினால் அரச வருமானம் உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அரச வருமானம்
இந்நிலையில் அடுத்த ஆண்டில் ஒரு நாளைக்கான அரசாங்கத்தின் கடன் தொகை 1364 கோடி ரூபா என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச வருமானத்திற்கும் அரச செலவுகளுக்கும் இடையில் பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் அரசாங்கம் பிழையான பொருளாதார பாதையில் நகர்வது புலனாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan