இந்தியா இழுவைப்படகுக்கு எதிராக 10000 கையெழுத்து வேட்டை ஆரம்பம்
கிளிநொச்சி - நாச்சிக்குடா சந்தி மற்றும் இரணைமாதா நகர், கடற்கரை, போன்ற பகுதிகளில் இந்திய இழுவைப் படகுக்கு எதிராக 10000 கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியோரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி, சட்டமா அதிபர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு கையளிக்கும் முகமாகக் இக்கையெழுத்து சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மீனவர்கள், மக்கள் என பலர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேபோன்று மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாண
மாவட்டங்களில் கையெழுத்து பெற்று எதிர்வரும் நான்காம் திகதி மனித உரிமை
தினத்தில் உயர்நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
