1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்! - ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, எதிர்வரும் 5ம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் விடுக்கப்பட்டுள்ள முழு கடையடைப்பு (ஹர்த்தால்) போராட்டத்திற்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு என்பது இன்றியமையாதது எனவும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான போராட்டத்தில் தாமும் இணைந்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
காலம் காலமாக பெருந்தோட்ட சமூகம் ஏமாற்றப்பட்டு வருவதாக கூறிய அவர், இனியும் பெருந்தோட்ட சமூகத்தை ஏமாற்றுவதற்கு இடமளிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தமது கட்சி பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட சமூகத்திலிருந்து வந்தவன் என்ற அடிப்படையில், தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு நிபந்தனைகள் அற்ற ஆதரவை வழங்க தயார் எனவும் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இன்னமும் உரிய கௌரவமளிக்கப்படாத தொழில்துறையாகவுள்ள பெருந்தோட்டத்துறைக்கு, உரிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது அனைவரது தார்மீக பொறுப்பு என அவர் கூறியுள்ளார்.
நாட்டிற்கு பெருமளவிலான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தொழிலாளர்களுக்கு, 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள ஏனைய தொழில்துறைகளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் வழங்கி, அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றதோ, அதேபோன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், 5ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களையும் இணைந்துக்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து உறவுகளும் தம்முடன் கைக்கோர்த்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை செழிப்புற செய்ய ஆதரவை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
