கடுமையான பாதுகாப்பு - சிறைக்கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டின் சிறைச்சாலைகளில் இருந்து 995 கைதிகள் அல்லது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் இவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கைகளில் இது தெரியவந்துள்ளது.அவர்களில் 554 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

சிறைச்சாலைகளில் உள்ள முழு கைதிகள்
உடனடியாக பிணை வழங்கப்பட்டாலும், உண்மையான விடுதலை சில நேரங்களில் நீதிமன்ற உறுதிப்படுத்தல்களைப் பொறுத்தது என்றும், வெள்ளிக்கிழமைகளில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் திங்கட்கிழமை விடுவிக்கப்படலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தேவைகளுக்கு ஏற்ப, பிணை வழங்கப்பட்ட அதே நாளில் சந்தேக நபர்களை விடுவிக்க வேண்டும் என்று கணக்காய்வு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
நாட்டின் சிறைச்சாலைகளில் தற்போது 10,350 கைதிகளை வைத்திருக்கும் திறன் கொண்டவை என்றாலும், கிட்டத்தட்ட 37,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது சாதாரண நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவை விட 250 வீதம் அதிகமாகும்.