கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு - வேலைக்காக ஒன்றுகூடியவர்களால் பதற்ற நிலை
துருக்கியில் வேலைபெற்று தருவதாக ஆயிரக்கணக்கானவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
போலியான முறையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் நேர்முக பரீட்சைக்கு சமூகம் அளித்துள்ளனர்.
எனினும் அவ்வாறு எந்தவொரு வேலைக்காகவும் யாரையும் அழைக்கப்படவில்லை என தெரிய வந்த நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஜே.ஆர்.ஜெயவர்தன மையத்தில் வேலை தேடுபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து வன்முறையாக மாறிய நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சமூக ஊடக தளங்களில் அறிவிப்பை வெளியிட்டு மூன்றாம் தரப்பினர் போலியான வேலை நேர்காணலை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
துருக்கியில் சில வேலை வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த வகையான போலி வேலை மோசடிகளுக்கு இரையாவதை விட, எங்கள் அதிகாரப்பூர்வ அறிவித்தல்களை பின்பற்றுமாறு வேலை தேடுபவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam