ஆயிரக்கணக்கான வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி முதல், இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சாரதி அனுமதிப்பத்திரம்
முன்னதாக, சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு வேரஹெரவில் உள்ள திணைக்களத்தின் அலுவலகத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டியிருந்தது.
இந்த செயல்முறையை எளிதாக்குவதே புதிய பிரத்தியேக கருமபீடத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறைந்த கட்டணத்தில் (2,000 ரூபா) சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதால், தொழில்முறை உள்ளூர் சுற்றுலா வாகன சாரதிகளின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறி, தேசிய சுற்றுலா வாகன சாரதிகள் சங்கம் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளது.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
