கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வருடங்களில் நூறு திருட்டு சம்பவங்கள்
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரையான மூன்று வருட காலப்பகுதியில் இந்த அதிவேக நெடுஞ்சாலையில் 100 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 11 திருட்டுச் சம்பவங்களால் ஏற்பட்ட இழப்பு சுமார் 580 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஏனைய 89 சம்பவங்களால் ஏற்பட்ட இழப்பின் பெறுமதி கணக்கிடப்படவில்லை.
உத்தேச மதிப்பீடு
அதிவேகப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள மின் கேபிள்கள், செப்பு கம்பிகள் மற்றும் வீதி மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தொடர்ச்சியாகத் திருடப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அவ்வாறான பதினொரு சம்பவங்களில் மட்டும் 580 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் பதிவாகியுள்ள ஏனைய 89 சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த உத்தேச மதிப்பீட்டுப் பணிகள் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன.