கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் பங்கேற்பு: ஆயத்த பணிகள் தீவிரம்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதையொட்டி நாளை காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து 100 பக்தர்கள் நான்கு விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகில் கச்சத்தீவு புறப்படுகின்றனர் என இராமேஸ்வரம் வேர்கோடு பங்கு தந்தை தேவசகாயம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதையொட்டி நாளை காலை ராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகத்திலிருந்து 100 பக்தர்கள் நான்கு விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகில் கச்சத்தீவு புறப்படுகின்றனர்.
அதற்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் பக்தர்கள் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கோவிட் பரவல் தடுப்பு விதிமுறைகளை பின் பற்றி கச்சத்தீவு ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை யாழ்.மறை மாவட்டத்தின் கீழ் உள்ள நெடுந்தீவில் பங்குதந்தை வசந்தம் தலைமையில் இலங்கை பக்தர்கள் 50 பேர் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். நாளை மாலை 5 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி பின் தேர்ப்பவனி, பிரார்த்தனைகள் நடைபெறும்.
சனிக்கிழமை காலை இலங்கை இந்தியப் பங்கு தந்தைகளின் கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான முழு ஏற்பாடுகளை இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளச் செல்லும் இலங்கை, இந்திய மீனவர்களை
ஒன்றிணைத்து மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை மீன் பிடி அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாகத் திருவிழாவில்
கலந்து கொள்ளச் செல்லும் இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
