சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் பிரதேசத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் நிகவெரட்டிய , வாரியபொல பிரதேசங்களில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை
குறிப்பாக அவுலேகம, கரந்தவெட்டிய, தமிழ்வெல்லம உள்ளிட்ட பகுதிகளில் சேதம் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும்இ வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
