யாழில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி: முதியவர் தலைமறைவு
யாழ்ப்பாணத்தில் 10 வயதுச் சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய 60 வயது முதியவர் தலைமறைவாகியுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதன்போது, அவரது வீட்டுக்கு பின் வீட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர் குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
விசாரணைகள்
இதனை சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய நிலையில், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, குறித்த முதியவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், மருதங்கேணி பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
