மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பரிதாப மரணம்!
மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(1.4.2026) இடம்பெற்றுள்ளது.
மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயத்தில் தரம்- 6இல் வகுப்பில் கல்வி கற்கும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து
மயிலம்பாவெளி கொம்புப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்த உற்சவத்தின் பின்னர் தனது மூத்த சகோதரனுடன் வீடு நோக்கிச் சென்ற இச்சிறுவன் பிரதான வீதியைக் கடக்கின்றபோது மோட்டார் சைக்கிளில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணம் செய்யததாகவும் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவையிலுள்ள மரண வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தவேளை சிறுவன் திடீரென வீதியைக் கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்எஸ்எம். நசிர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிரமடையும் நிலைமை: உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலை - நாட்டில் செல்லப்பிராணி வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை




நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam