குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்
மட்டக்களப்பு - குருக்கள்மடம் பகுதியில் கடந்த 3 நாட்களாக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட நிலையில் மனித உடலின் எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் அவ்விடத்தில் அகழும் பணி நேற்று(01.04.2026) மாலையோடு கைவிடப்பட்டு அப்பகுதி மூடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியில்
மூன்றாவது நாளோடு முதலாவதாக தோண்ட்டப்பட்ட இடம் கைவிடப்பட்டு மூடப்படுகின்ற நிலையில் அகழ்வுப் பணியும் நேற்றோடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அப்பகுதியில் சந்தேகிக்கப்படும் ஏனைய இடங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு மட்டு கல்முனை வீதியால் பயணம் செய்த 170 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு குருக்கள்மடம் கடற்கரையை அண்டிய பகுதியில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.







குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam