ஹட்டன் நகரில் வாடகை நிலுவை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்
ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு இன்று(14.9.2026) சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்தார்.
ஹட்டன் நகர சபைக்கு சொந்தமான கடை அறைகளுக்கான வாடகை நீண்ட காலமாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை அறவிடும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, ஹட்டன்–டிக்கோயா நகர சபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களில் இருந்து நிலுவையில் உள்ள வாடகை மற்றும் ஏனைய கட்டணங்களை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு அறிவித்தல்
இதன் அடிப்படையில், ஹட்டன் நகரில் நீண்ட காலமாக வாடகை நிலுவையை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு பல தடவைகள் அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், இறுதி எச்சரிக்கையாக சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், உரிய காலத்திற்குள் நிலுவைத் தொகையை செலுத்தாத 10 கடைகளுக்கே இன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகர சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹட்டன்–டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவிக்கையில், நகர சபைக்கு சொந்தமான கடைகளில் இருந்து இதுவரை சுமார் 14 கோடி ரூபாய் வரையிலான வாடகை நிலுவைத் தொகை அறவிடப்பட வேண்டியுள்ளது.
நிலுவைத் தொகை
நீண்ட காலமாக பெருந்தொகையான வாடகை நிலுவையை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், நிலுவைத் தொகை செலுத்தப்படாத நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சில கடை உரிமையாளர்கள் சீல் வைக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, மீதமுள்ள நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam