முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டித்த 10 பேரும் பிணையில் விடுதலை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் எனக் கடந்த ஆண்டு மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைது செய்யப்பட்ட 10பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் உட்பட 10 பேர் அன்றையதினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்குத் தீபச் சுடர் ஏற்றி, கடலில் பூக்களைத் தூவி, அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அதனைப் படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களைப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்து வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ் விண்ணப்பித்த பிணை
மனுவின் அடிப்படையில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.





நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam