10 அமைச்சர்கள் இம்மாதம் நியமிக்கப்படுவார்கள்: எஸ்.பி. திஸாநாயக்க
இந்த மாதம் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளனர்.
''நீங்கள் எப்போது அமைச்சராகப் போகின்றீர்கள்?'' எனும் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், விரைவில் எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும்.
தற்போது உள்ள அமைச்சரவையைத் திருத்தி நல்லதோர் அமைச்சரவையை அமைக்கும் தேவை ஜனாதிபதிக்கு உண்டு.
அமைச்சரவை
இந்நிலையில் தற்போதுள்ள அமைச்சரவை அங்கும் இங்குமாக எடுத்து நிரப்பப்பட்ட அமைச்சரவை ஆகும்.
நாட்டின் அபிவிருத்தியில் பங்குகொள்ளும் அமைச்சு மீதுதான் எனக்கு விருப்பம் அதிகம்.
இதற்கமைய,10 புதிய அமைச்சர்கள் இந்த மாதம்
நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
