மே மாதத்தில் தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்
எதிர்வரும் மே மாதம் அரசாங்கத்தின் சில உயர்மட்ட பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என நம்பகமான உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கிடைத்த தகவல்களுக்கமைய, அரசாங்கத்தின் சில முக்கிய அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் இடையில் ஏற்கனவே கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
சுபகாரியங்கள் தயார்
அதற்கான சுபகாரியங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவலுக்கமைய, மே மாதத்தின் முதல் வாரத்தில் இந்த அரசியல் நிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்கும் தீவிர முயற்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
